மாமல்லபுரம் மக்களுக்கு மாற்று இடம்: அரசுக்கு வைகோ வேண்டுகோள்


         மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் கருக்காத்தம்மன் கோவில், இரட்டை குட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். புதிய பேருந்து நிலையத்துக்காக தாங்கள் வாழும் இடத்தை காலி செய்ய மக்கள் சம்மதித்த போதிலும், மாற்று இடம் வழங்க மக்கள் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்ததை உதாசீனப்படுத்திவிட்டு, காவல்துறையை பயன்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் வீடுகளையும், உடைமைகளையும் பறிகொடுக்கும் மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர் என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வைகோ எச்சரித்துள்ளா
-பசுமை நாயகன்