காஞ்சிபுரம் மதுராந்தகம் சன்னதி தெருவில் இருக்கும் மருத்துவமனை மற்றும்
ரத்த பரிசோதனை மையத்தில், இன்று பிறப்பகலில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
இதில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், நோயாளிகள் உள்பட 11 பேர்
மயக்கமடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை
தொடர்ந்து 11 பேரும் மீட்கப்பட்டு மதராந்தகம் அரசு பொது மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். வாயுகசிவு குறித்து போலீசார்
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாமல்லபுரம் மக்களுக்கு மாற்று இடம்: அரசுக்கு வைகோ வேண்டுகோள்

மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்தில்
குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும்படி மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் புதிய
பேருந்து நிலையம் அமையவிருக்கும் கருக்காத்தம்மன் கோவில், இரட்டை குட்டை
பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக
குறிப்பிட்டுள்ளார். புதிய பேருந்து நிலையத்துக்காக தாங்கள் வாழும் இடத்தை
காலி செய்ய மக்கள் சம்மதித்த போதிலும், மாற்று இடம் வழங்க மக்கள்
பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்ததை உதாசீனப்படுத்திவிட்டு, காவல்துறையை
பயன்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும் வைகோ கேட்டுக்
கொண்டுள்ளார்.
இதனால் வீடுகளையும், உடைமைகளையும் பறிகொடுக்கும் மக்கள் போராட வேண்டிய
நிலைக்கு தள்ளப்படுவர் என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மாவட்ட
நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வைகோ எச்சரித்துள்ளா
-பசுமை நாயகன்
நகை மோசடி தனியார் வங்கி ஊழியர் கைது
தங்க நாணயம் வாங்கித் தருவதாக கூறி, தீபாவளி சீட்டு நடத்துபவரிடம்
மோசடியில் ஈடுபட்டதாக தனியார் வங்கி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த உஷா, தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் தான் நடத்தி வரும் தீபாவளி பரிசுச் சீட்டு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் தருவதற்காக, உஷாவிடம் 20 லட்சம் ரூபாய் தந்ததாக கூறப்படுகிறது. இதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலா என்பவரிடமும், தங்க நாணயம் வாங்கித் தருவதாகக் கூறி, 35 சவரன் நகையையும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் உஷா பெற்றதாக கூறப்படுகிறது. தங்க நாணயங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, மீனாட்சி மற்றும் கலா, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், மோசடியில் ஈடுபட்டதாக உஷாவை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த உஷா, தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் தான் நடத்தி வரும் தீபாவளி பரிசுச் சீட்டு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் தருவதற்காக, உஷாவிடம் 20 லட்சம் ரூபாய் தந்ததாக கூறப்படுகிறது. இதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலா என்பவரிடமும், தங்க நாணயம் வாங்கித் தருவதாகக் கூறி, 35 சவரன் நகையையும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் உஷா பெற்றதாக கூறப்படுகிறது. தங்க நாணயங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, மீனாட்சி மற்றும் கலா, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், மோசடியில் ஈடுபட்டதாக உஷாவை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
தமிழக வட கடலோர பகுதிகளில் மழை : காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி
நேரத்துக்கு மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் கனமழை பெய்யவும்
வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு
கடலோர மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்
என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளிலும்
சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,
அவ்வப்போது மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம்,
புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில், பலமான காற்று
தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ
மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன்
உத்தரவிட்டுள்ளார்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
இயற்கை விவசாய மாம்பழம்
தமிழ்நாடு விவசாயிகளையே தங்களுடைய இயற்கை வேளாண் பண்ணை முலம் திரும்பி பார்க்கவைக்கும் சகோதரர்கள் பாரதி மற்றும் சரவணன்.
திருவள்ளுர் அருகே நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தை மாம்பழங்களை அதிகளவில் செழிக்கவைத்து சாகுபடி செய்துள்ள விவசாயி பாரதியிடம் இயற்கை விவசாயம் குறித்த அலோசனைகளை பெற்றுக்கொள்ளாலம். திருவள்ளுரைச அடுத்த சேர்ந்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் பாரதி இவர் திருவாலங்காட்டை அடுத்த காவேரி ராசபுரத்தில் நூற்றுக்காணக்கான ஏக்கர் பரப்பளவில் மாங்காய், சப்போட்டா, நெல்லிக்காய் என பல்வேறு வகையான மரங்களை பயிரிட்டு வருகிறார். இவர் அனைத்து வகையான பயிர்களுக்கும் இயற்கை விவசாயத்தை மட்டுமெ நம்பி சாகுபடி செய்துள்ளார்.
உலக விசாய மாநாட்டிற்கு இஸ்ரேல் சென்ற போது எடுத்தபடம்
தற்போது அவரது தோப்பில் பொங்களுரா, செந்தூரா, அல்போன்சா, காலப்பாடி, இமாயத், மல்கோவா உள்ளிட்ட பல வகையான “மா” ரகங்களை சாகுபடி செய்துள்ளார். மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்குவார். விருப்பமுள்ள விவசாயிகள் 09940017635 / 09380533376 என்ற கைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
-இரா.பிரசாத், ஆசிரியர் டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)



